Connect with us
 

News

அஸ்வின் – பிரபு சாலமன் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது !

Published

on

‘மைனா’ என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் இயக்குநர் பிரபு சாலமன் அப்படத்தை தொடர்ந்து கும்கி படத்தை இயக்கி முன்னணி இயக்குநர் என முத்திரை பதித்தார். ஆனால் இவர் இயக்கி வரும் படங்கள் கடந்த சில வருடங்களாக படு தோல்வியை சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக இவரின் கடைசி படத்தின் தோல்வி இவரை கடன்காரன் ஆக்கிவிட்டது.

இந்த நிலையில் அவரின் மகன் சஞ்சய்யை வைத்து அவரை கதா நாயகனாக அறிமுகப்படுத்தி ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளாராம். இப்படத்துக்கான ஆரம்ப்பக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

குக் வித் கோமாளி புகழ் அஸ்வினை வைத்து ஒரு படத்தை இயக்கை வந்தார் பிரபு சாலமன். வழக்கம் போல இந்த படமும் காடும் காடு சார்ந்த வாசனையும் கொண்ட திரைப்படமாம்.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் முடித்துள்ளாராம். மிக விரைவில் இப்படத்தின் வெளியீட்டு தேதிதை அறிவிக்கவுள்ளதாம் படக்குழு.

அஸ்வின் குமாரின் முதல் படமான ‘என்ன சொல்ல போகிறாய்’ இவருக்கு தோல்வி படமாகவே அமைந்து விட்டது. இதனால் இப்படத்தை பெருதும் நம்பியிருக்கிறார் அஸ்வின் என்று சொல்லப்படுகிறது.