Connect with us
 

News

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி?

Published

on

இயக்குநர் சிபி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘டான்’ இந்த திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. தற்போதுள்ள கொரோனா ஊரடங்கு காரணமாக ‘டான்’ திரைப்படம் தள்ளி போகவும் அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குநர் அனு தீப் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் எஸ்.தமன் இசையமைக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் சென்னையில் ஆரம்பிக்கவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர் நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகை ‘சாய் பல்லவி’ நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.