Connect with us
 

News

வலிமை படத்தில் அஜித்துடன் டூயட் இல்லாது வருத்தம் – ஹூமா குரேசி !

Published

on

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் வலிமை இந்த மாதம் 24-ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகவுள்ளது.

அஜித்துக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் ஹிந்தி நடிகை ஹூமா குரேஷி முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

அண்மையில் அளித்த பேட்டியில் பேசிய ஹூமா குரேஷி கூறியதாவது :- வலிமை படத்தில் முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள பைக் சாகச காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவரும்.

எனக்கு தமிழில் வசனங்கள் பேசுவதற்கு இயக்குநர் வினோத் மிகவும் உதவியாக இருந்தார். அதே சமயம் படப்பிடிப்பு தளத்தில் அஜித் குமார் உதவியாக இருந்தார். முதல் நாள் படப்பிடிப்பிலிருந்தே அஜித்துடன் நடிப்பதற்கு மிகவும் சுலபமாக இருந்தது. ஆனால் அஜித்துடன் டூயட் இல்லாதது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.

காலா படத்திற்கு பின்னர் நிறைய வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தேன் நினைத்த அளவிற்கு வரவில்லை. கண்டிப்பாக வாய்ப்பு கொடுத்தால் தமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் அதற்கு நான் தயாராக உள்ளேன்.

ஹிந்தி மற்றும் தமிழ் மொழி படங்களில் நடிப்பதற்கு வித்தியாசம் தெரியவில்லை எந்த மொழியிலும் நடிப்பு மட்டுமே பேசும் என்று கூறினார்.