Connect with us
 

News

மிகப்பெரிய தொகைக்கு விலை போன விக்ரம் திரைப்படம் !

Published

on

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். கமல் ஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கமல் ஹாசனுடன் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தநிலையில் விக்ரம் படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் மாபெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது. விக்ரம் படத்தின் சேட்டிலைட் மற்றும் ஓடிடி வெளியீட்டு உரிமைகளை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் 110 கோடிக்கு மேல் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை ஏப்ரல் 29-ம் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.