Connect with us
 

News

நானே வருவேன் படத்தில் தனுஷுடன் நடிக்கும் செல்வராகவன் !

Published

on

தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன் இவரின் இயக்கத்தில் வெளியான ‘காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, என்.ஜி.கே என அனைத்துமே இன்று வரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைப்படங்கள்.

இந்த படங்களுக்கு பின்னர் முன்னணி இயக்குநர் என்று உயர்ந்த செல்வராகவன் சமீப காலமாக படங்களில் நடிக்கவும் ஆரம்பித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து ‘சாணி காயிதம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து திரைக்கு வரவுள்ளது.

தற்போது தளபதி விஜய்யுடன் ‘பீஸ்ட்’ படத்திலும் மிக முக்கியமான ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மோகன் ஜி இயக்கும் படத்தில் கதா நாயகனாக நடிக்கிறார்.

இந்த நிலையில் அடுத்து இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘நானே வருவேன்’ படத்தில் தனுஷுடன் இணைந்து செல்வராகவன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது பற்றி இப்படத்தின் தயாரிப்பாளரான தாணு டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இயக்கத்தில் சிகரம் தொட்ட செல்வராகவன் நடிப்பிலும் சிகரம் தொட வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டு நானே வருவேன் படத்தின் வித்தியாசமான தோற்றங்களில் இருவரும் உள்ள போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த போஸ்டரில் தனுசும் செல்வராகன் வித்தியாசமான தோற்றங்களில் உள்ளனர். இதன் மூலம் தனுஷுடன் செல்வராகவன் நடிப்பது உறுதியாகிவிட்டது. கண்டிப்பாக செல்வராகவன் இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.