Connect with us
 

News

அஜித்தின் 62-வது படம் மங்காத்தா 2 இரண்டாம் பாகமா?

Published

on

தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. ரஜினிகாந்த்தின் எந்திரன் 2-ம் பாகம் 2.0 என்ற பெயரில் வெளியானது.

கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்குமாரின் பில்லா, விஷாலின் சண்டடக்கோழி, தனுஷின் வேலையில்லா பட்டதாரி, மாரி ஆகிய படங்களின் 2-ம் பாகங்கள் வந்துள்ளன.

சூர்யாவின் சிங்கம், சுந்தர்.சியின் அரண்மனை 3 பாகங்கள் வந்துள்ளன. கமலின் இந்தியன் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த வரிசையில் அஜித் குமார், த்ரிஷா நடித்து 2011-ம் ஆண்டு வெளியான மங்காத்தாவின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் முயற்சிகள் நடப்பதாக கிசு கிசுக்கப்பட்டது.

அஜித் ரசிகர்கள் மங்காத்தா 2-ம் பாகம் எடுக்குப்படி வெங்கட் பிரபுவை வற்புறுத்தியும் வந்தனர். இந்த நிலையில் வெங்கட் பிரபு அண்மையில் அளித்த நேர்காணல் ஒன்றில் மங்காத்தா 2 படத்துக்கான கதையை தயார் செய்து விட்டதாகவும் அஜித் குமார் எப்போது அழைத்தாலும் மங்காத்தா 2 படத்தை இயக்க தயாராகவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அஜித் தனது 61-வது படத்தை முடித்து விட்டு மங்காத்த 2 படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.