Connect with us
 

News

அஜித் 62-வது படத்தை இயக்கும் விக்னேஷ் சிவன் !

Published

on

வலிமை படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த ak 61 new look போட்டோ பயங்கர வைரலானது. அவரின் அந்த லுக் அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. 2019 ரிலீஸான “நேர்கொண்ட பார்வை” மற்றும் இந்த மாதம் வெளியான “வலிமை” படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹெச் வினோத் அவர்கள் படத்தை இயக்குகிறார். படத்திற்கான பூஜை முடிந்து படப்பிடிப்பிற்காக வேலைகள் ஆரம்பித்துள்ளனர்.

அடுத்தடுத்து தல அஜித்தின் படத்தை இயக்குகிறார் ஹெச் வினோத். உண்மை சமபாவங்களை மக்களுக்கு ஏற்றவாறு படம்பிடித்து அவர்களை ரசிக வைப்பதோடு இல்லாமல் அவர்களுக்கு நாட்டில் நடக்கும் சம்பவங்களை தெரிவிக்கிறார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் என்று பல படங்களை திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் இவருடன் சேர்த்து அஜித் நடிப்பது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுகிறது.

இந்த படத்திற்கான வேலைகளே இப்போது தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது, அதற்குள்ளவே அஜித்தின் AK 62 படத்தின் ஒரு டிப் சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. என்ன தகவலுன்னா அஜித்தின் அடுத்த படத்தை லைகா ப்ரோடுக்ஷன்ஸ் தயாரிக்க போறாங்களாம். அது மட்டும் இல்ல இந்த படத்தை உலக சாதனை படைத்த halamathi habibo பாடலை உருவாக்கிய அனிருத் AK 62 music director இசையமைக்க உள்ளாராம். பாத்திங்கள எப்படி பட்ட கூட்டணி சேர்ந்துருக்குன்னு, இதுக்கே அப்படினா இன்னும் ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு. அது, விக்னேஷ் சிவன் தான் இந்த படத்தை இயக்க போறாராம்.

இப்பொழுது AK 62 Director விக்னேஷ் சிவன் அவர்கள் இயக்கும் படத்திற்கு ஹீரோயினாக நயன்தாரா தான் கட்டாயம் இருப்பாங்க. இந்த படம் மட்டும் என்ன விதிவிலக்கா, இந்த படத்திற்கும் லேடி சூப்பர் ஸ்டார் தான் லீடு. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் காத்து வாக்குல இரண்டு காதல் படத்திற்கு பிறகு இந்த தகவல் வெளியானது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.விஸ்வாசம் படத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கும் இந்த படத்திற்கு பெரும் வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருக்கிறது.