Connect with us
 

News

விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் வரும் கைதி டில்லி !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘விக்ரம்’ ஜூன் 3-ம் தேதி திரையரன்ங்குகளில் வெளியாகவுள்ளது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் மே 15-ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

இப்படம் சிறைச்சாலையிலிருந்து சில கைதிகள் தப்பித்து செல்லும் சிறை கைதிகளை பற்றிய படம் என்றும் அதில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக கமல்ஹாசன் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் சிறைச்சாலை பற்றிய காட்சிகளில் ஒரு சிறு கெளரவ வேடமாக கைதி படத்தில் டில்லி வேடத்தில் நடித்த கார்த்தி அதே வேடத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த காட்சியை படக்குழு ரகசியமாக வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்று மாலை 7 மணிக்கு விக்ரம் படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது. இப்பாடலை கமல்ஹாசன் அவர்களே எழுதி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.