Connect with us
 

News

தனுஷுக்கு ஜோடியாகும் நடிகை கிரித்தி ஷெட்டி !

Published

on

நடிகை கிருத்தி ஷெட்டி தெலுங்கில் வெளியான உப்பெனா என்ற படத்தில் நடித்தன் மூலம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டார். இப்படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். தற்போது இயக்குநர் லிங்குசாமி தமிழ், தெலுங்கில் இயக்கி வரும் ‘தி வாரியர்’ என்ற படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் பாலா சூர்யாவை வைத்து இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். இது சூர்யாவைன் 41-வது திரைப்படமாகும்.

இந்த நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முதல் இப்படத்தில் தனுஷுடன் நடிக்க இருந்தவர் நடிகை பிரியங்கா அருள் மோகான் ஆனால் அவரின் கால்ஷீட் பிரச்சனையாக அதில் நடிக்க முடியாமல் போக தற்போது கிரித்தி ஷெட்டி ஒப்பந்தமாகியுள்ளார்.