Connect with us
 

News

அடுத்தடுத்து வெளியான வாரிசு பட போஸ்டர்கள் !

Published

on

தெலுங்கு இயக்குநர் வம்சி படிபள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படத்துக்கு Varisu என பெயர் வைத்துள்ளனர் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியானது.

அதனை தொடர்ந்து இன்று விஜய்யின் பிறந்த நாள் என்பதால் மேலும் 2 போஸ்டர்கள் வெளியாகும் எனவும் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு ஒன்றையும் நேற்று வெளியிட்டது.

அதன் இன்று காலை ஒரு போஸ்டர் வெளியானது அதில் விஜய் குழந்தைகளுடன் ஒரு லாரில் படுத்துக்கொண்டு வானத்தை பார்த்து சிரிப்பது போன்ற ஒரு போஸ்டர் வெளியானது.

இந்த நிலையில் தற்போது மூன்றாவது போஸ்டர் வெளியாகியுள்ளது அதில் விஜய் ஸ்டைலாக மாஸாக பைக் மேல் அமர்ந்துள்ளார்.இந்த மூன்று போஸ்டர்களையும் அடுத்தடுத்து வெளியிட்டு தளபதி விஜய் ரசிகர்களுக்கு சூப்பரான பரிசை கொடுத்துள்ளது வாரிசு படக்குழு.