Connect with us
 

News

தனுஷ் நடிக்க வேண்டிய படத்தில் நான் நடித்தேன் – பஹத் பாசில் !

Published

on

மலையாள சினிமாவில் மட்டுமல்ல தமிழ் சினிமாவிலும் புகழ் பெற்ற நடிகராக தற்போது வலம் வருபவர் நடிகர் Fahad Faasil. தமிழகத்தில் இவருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார் காரணம் இவர் தேர்வு செய்து நடிக்கும் படங்களும் இவரின் கதாப்பாத்திரமும்தான் காரணம்.

தற்போது பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள மலையன் குஞ்சு திரைப்படம் ஜூலை 22-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் ஒரு தகவலை அளித்துள்ளார். அதில் ‘கும்பலாங்கு நைட்ஸ்’ திரைப்படத்தில் ஷம்மி கபூர் என்ற கதாப்பாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது தனுஷ். அந்த கதை தனுஷுக்காக எழுதியது ஆனால் பட்ஜெட் காரணமாக அதை அவரிடம் சொல்ல முடியாமல் போகவே நான் அப்படத்தில் நடித்தேன் என்று கூறியுள்ளார்.

கும்பலாங்கு நைட்ஸ்’ திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.