Connect with us
 

Reviews

எண்ணித் துணிக – விமர்சனம் !

Published

on

Movie Details

இயக்குநர் வெற்றி செல்வன் இயக்கத்தில் ஜெய் மற்றும் அதுல்யா ரவி நடிப்பில் இன்று திரையரங்கில் வெளியான திரைப்படம் Yenni Thuniga.

படத்தின் ஆரம்பத்திலேயே அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலில் ஒரு மிகப்பெரிய வில்லனை காட்டுகிறார்கள். பல சட்டவிரோத செயல்களை செய்யும் இவர் சுமார் 2000 கோடி மதிப்புள்ள 10 வைரங்களை இங்கிருந்து எடுத்து சென்று விட்டார்கள் என்று கூறுகிறார். அது இந்தியாவில் உள்ள ஒரு அரசியல்வாதி கையில் இருக்கிறது அதை திருடி தருமாறு வம்சி கிருஷ்ணாவிடம் கூறுகிறார்.

ஒரு மாதங்களுக்கு பின்னர் சென்னையிலுள்ள ஒரு அமைச்சர் ஒருவரின் நகைக்கடைக்குள் 5 பேர் கொண்ட கொள்ளைக்கார கும்பல் அங்கு வந்து துப்பாக்கி முனையில் நகைகளை கொள்ளையடித்து செல்கிறது. போகும் போது சிலரை சுட்டு கொலை செய்து விட்டும் செல்கிறார்கள்.

அந்த வங்கிக்கொளையில் நாயன் ஜெய் அவர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. பின்னர் அவர்களை கண்டு பிடித்து நாயகன் கொலை செய்வதே படத்தின் மீதிக்கதை. நாயகனுக்கு இந்த கொள்ளை கும்பலால் ஏற்பட்ட இழப்பு என்ன? அவர்களை எப்படி கண்டு பிடித்தார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

ஜெய் தனது வழக்கமான நடிப்பை சிறப்பாகவே நடித்திருக்கிறார். குறிப்பாக இவரின் காதலி இறந்த போதும் சரி பின்னர் அதை நினைத்து அழும் காட்சிகளில் அழகாக நடித்துள்ளார்.

நாயகியாக வரும் சொல்லும் அளவுக்கு ஒன்றுமில்லை. படத்திற்கு ஒரு நாயகி வேண்டும் என்பதற்காகவும் டூயட் பாட ஒரு நடிகை வேண்டும் என்பதற்காக இவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

வில்லனாக வரும் வம்சி கிருஷ்ணாவின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. குறிப்பாக நான் ஒரு அப்பனுக்குதான் பிறந்ததானு எனக்கு எப்படிடா தெரியும்னு கேட்டுக்கொண்டு இவர் கொலை செய்யும் காட்சி வில்லத்தனத்தின் உச்சம்.

வில்லியாக வரும் வித்யா பிரதீப் நன்றாகவே நடித்துள்ளார். இரண்டாவது நாயகியாக வரும் அஞ்சலி நாயர் ரசிக்கும் படியான நடிப்பு இவரின் கணவர் இறந்த பின்னர் இவர் துடிக்கும் துப்பும் சரி. குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற இவரின் பரிதவிப்பையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

மத்திரியாக வரும் சுனில் ஷெட்டி காமெடி கலந்த வில்லத்தனைத்தால் நம்மை ரசிக்க வைக்கிறார். அரசியல் வாதிகள் என்றாலே ஆங்கிலம் தெரியாமல்தால் இருப்பார்கள் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

ஒரு நல்ல கதையை எழுதி விட்டு அதை திரைக்கதை அமைப்பதில் கோட்டை விட்டு விட்டார் இயக்குநர். படத்தில் லாஜிக் மீறல்கள் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக ஆரம்பத்தில் காட்டப்படும் வில்லன் யார்? எதற்காக அந்த வைரங்களை தன்னுடையது என்று சொல்கிறார் என்ற விளக்கம் சொல்லவில்லை.

இரவு நேரத்தில் ஜெய் வீட்டில் இருக்கும் போது வில்லன் கூட்டம் உள்ளே போனது எப்படி? அந்த நேரத்தில் வீட்டை திறந்து விட்டு யாரும் இருப்பார்களா? என்ற கேள்வி எல்லாம் நமக்கு வரத்தான் செய்கிறது. படத்தின் வசங்களும் காட்சி அமைப்புகளும் அழுத்தமில்லாமல் போகிறது இதை எல்லாம் கொஞ்சம் கவனித்து இருக்கலாம் இயக்குநர் வெற்றி செல்வன்.

வழக்கமாக த்ரில்லர் படமென்றால் சாம் சி.எஸ். இசை நன்றாக இருக்கும் ஆனால் இப்படத்தில் பாடல்கள் எல்லாம் எல்லாம் பலவீனம் பின்னணி இசை சற்று ரசிக்கலாம்.குர்டிஸ் ஆண்டன் ஒளிப்பதிவு பல காட்சிகளுக்கு உயிராக உள்ளது.

ஒரு நல்ல அதிரடி ஆக்‌ஷ த்ரில்லர் படமாக வரவேண்டிய திரைப்படம் Yenni Thuniga அழுத்தமில்லாத திரைக்கதையால் ஒரு சாதாரண படமாக கடந்து போகிறது.
Vezham Review By Cine Timee

[wp-review id=”43450″]