Connect with us
 

News

பொன்னியின் செல்வன் டிரைலரை வெளியிடும் முதல்வர் !

Published

on

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் Ponniyin Selvan. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஜஸ்வர்யா ராய், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

அமரர் கல்கி எழுதிய Ponniyin Selvan நாவலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பல இயக்குநர்களின் பெருங்கனவான Ponniyin Selvan படத்தின் ட்ரெய்லரை தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார். செப்டம்பர் 6-ம் தேதி சென்னையிலும், 8-ம் தேதி ஜதராபாத்திலும் பாடல் வெளியீட்டை மிக கோலாகமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.