Connect with us
 

News

பிக்பாஸ் நட்சத்திரங்களுடன் அஜித் குமார் வைரலாகும் புகைப்படங்கள் !

Published

on

அஜித் குமார் பிக்பாஸ் நட்சத்திரங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.

துணிவு படத்தின் படப்பிடிப்பு தற்போது தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. அங்கு சுற்றுலா சென்ற பிக்பாஸ் பிரபலங்கள் பாவனி, அமீர், மற்றும் சிபி ஆகியோர் மூவரும் அஜித் குமாரை சந்தித்து புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.

அப்படி பவானி மற்றும் அமீர் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை பாவனி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட அதுவும் சும்மா இல்லாமல் அஜித்தை என் அண்ணா என்று பதிவிட்டுள்ளார்.

சும்மா விடுவார்களா அஜித் ரசிகரள் அதனை தற்போது வைரலாக்கி வருகிறார்கள். பொங்களுக்கு வெளியாகவிருக்கும் துணிவு திரைப்படத்துடன் தளபதி விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படமும் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.