Connect with us
 

News

50 வயது கதாப்பாத்திரத்தில் லியோ படத்தில் விஜய் உறுதியானது !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இவர்களுடன் இப்படத்தில் பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், கெளதம் மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் விஜய் 50 வயது கதாப்பாத்திரத்தில் கேங்ஸ்டர் வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. தற்போது அதை உறுதியாகிவிட்டது. விஜய் மனைவியாக திரிஷா நடிக்க இவர்களின் 15 வயது மகளாக பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியின் போட்டியாளருமான இலங்கை தமிழ் பெண் ஜனனி நடிக்கிறார்.

இது குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. காஷ்மீரை தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவிருக்கும் நிலையில். அந்த படப்பிடிப்பில் ஜனனி கலந்து கொள்ள இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.