Connect with us
 

News

4 மொழிகளில் உருவாகும் செவ்வாய்க்கிழமை !

Published

on

தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஆர்எக்ஸ் 100’ படத்தின் மூலம் புதிய ட்ரெண்டை அறிமுகம் செய்தவர் இயக்குநர் அஜய் பூபதி. செவ்வாய்கிழமை அவரது தற்போதைய புதிய படத்தின் தலைப்பு. முத்ரா மீடியா ஒர்க்ஸ் சார்பில் ஸ்வாதி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா எம் மற்றும் ஏ கிரியேட்டிவ் ஒர்க்ஸ் சார்பில் அஜய் பூபதி ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். தயாரிப்பாளராக அஜய் பூபதியின் முதல் படம் இது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகவுள்ளது. இதன் டைட்டில் மற்றும் கான்செப்ட் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.

கான்செப்ட் போஸ்டர் கிரியேட்டிவாகவும் மற்றும் சுவாரஸ்யமாகவும் உள்ளது. ஒரு இளம்பெண் நடனமாடும் வகையில் பட்டர்ஃபிளை வடிவிலான உடை அணிந்து இருக்கும்படியான டான்சிங் போஸ்டர் உள்ளது.

படத்தைப் பற்றி பேசிய இயக்குநரும் தயாரிப்பாளருமான அஜய் பூபதி, ”செவ்வாய்கிழமை’ கான்செப்ட் அடிப்படையிலான படம். இது இந்திய சினிமாவில் இதுவரை முயற்சி செய்யப்படாத வகையைச் சேர்ந்தது. படத்தைப் பார்க்கும்போது தலைப்பின் பின்னணியில் உள்ள நியாயத்தை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். கதையில் மொத்தம் 30 கதாபாத்திரங்கள் உள்ளன. மேலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பெரிய அளவில் ஒரு குறிப்பிட்ட இடம் கதையில் உண்டு. படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் பொருத்தமானது மற்றும் முக்கியமானது” என்று கூறினார்.

தயாரிப்பாளர்கள் ஸ்வாதி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா எம் கூறுகையில், “இது பான்-இந்தியன் படம் அல்ல. பக்கா தென்னிந்திய படம். அஜய் பூபதி காரு ‘ஆர்எக்ஸ் 100’ மூலம் எதிர்பாராத ஆச்சரியத்தை கொடுத்தது பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது. அதுபோல, இந்த கான்செப்ட்டும் உற்சாகமானது மற்றும் இதன் உள்ளடக்கம் பிரமாதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘கந்தாரா’ புகழ் அஜனீஷ் லோக்நாத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் தயாரிப்பு பணிகளை தொடங்கினோம். நடிகர்கள் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்” என்கிறார்.

Continue Reading