Connect with us
 

News

ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி படத்தில் ஜோடியாக க்ரித்தி ஷெட்டி !

Published

on

ஜெயம் ரவி நடித்துள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இம்மாதம் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது ஜெயம் ரவி சைரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து அறிமுக இயக்குநர் புவனேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். சுமார் 100 கோடு பொருட் செலவில் மிக பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ஜீனி என பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமக்கவுள்ள இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இளம் நடிகை கிரித்தி ஷெட்டி நடிக்கவுள்ளார். ஜூன் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளது. அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மிக விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.