Connect with us
 

News

பாதி எரிந்த முகத்துடன் லியோ பட சண்டைக்காட்சியில் தளபதி விஜய் !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் – த்ரிஷா நடித்து வரும் திரைப்படம் லியோ. இவர்களுடன் சஞ்சய் தர், மிஷ்கின், கெளதம் மேனன், அர்ஜூன் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் வில்லன்களாக மன்சூர் அலிகான், சஞ்சத் தத், அர்ஜூன், மிஷ்கின் ஆகியோர் நடித்து வருகின்றனர். படத்தின் முக்கியமான காட்சிகளை காஷ்மீரில் சுமார் 60 நாட்களுக்கு மேல் படமாக்கினர்.

இதனையடுத்து தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் வில்லனாக நடித்து வருகிறார். இன்று விஜய் மற்றும் அர்ஜூன் மோதும் சண்டைக்காட்சிகயை படமாக்கினர். இந்த சண்டைக்காட்சியில் பாதி எரிந்த முகத்துடன் விஜய் சண்டை போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.