Connect with us
 

News

வெளியீட்டு முன்னரே 2.0 படத்தின் சாதனையை முறியடித்த லியோ !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ இப்படத்தின் வெளிநாட்டு மற்றும் கேரளா திரையரங்க வெளியீட்டு விநியோக உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளது.

மாஸ்டர் படத்திற்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் விஜய் இருவரும் இரண்டாவது முறையாக இப்படத்தில் இணைந்ததே ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார் சுமார் 14 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் என்றதும் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகிறார்கள். இப்படத்தில் இவர்களுடன் கெளதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் லிதோ படத்தின் வெளிநாட்டு மற்றும் கேரள திரையரங்க வெளியீட்டு விநியோக உரிமைகள் முறையே ரூ.60 கோடிக்கும் 16 கோடி ரூபாய்க்கும் விற்பனையாகி உள்ளது. அதாவது ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 படத்தின் ப்ரீ-ரிலீஸ் வியாபாரத்தை முறியடித்து அதிக தொகைக்கு விற்பனையான தமிழ் படம் லியோ என்ற சாதனையை படைத்துள்ளது.

வெளியீட்டு முன்னரே ரூ.350 கோடிக்கும் மேள் வருமானம் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.