Connect with us
 

News

நிறைவு பெற்றது லால் சலாம் படப்பிடிப்பு !

Published

on

ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா, தம்பி ராமையா, செந்தில் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம். இப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

திருவண்ணாமலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது அதே திருவண்ணாமலையில் இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார் ஜஸ்வர்யா ரஜினி. இது குறித்து பேசிய ஜஸ்வர்யா ரஜினி கடந்த 4 மாதங்களாக எங்கள் குழுவினர் கடினமாக உழைத்து இந்த படப்பிடிப்பை முடித்துள்ளோம். குறிப்பாக கடைசி 22 மணி நேரங்கள் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். என் ‘லால் சலாம்’ குடும்பத்துக்கு நன்றி. திருவண்ணாமலையில் படப்பிடிப்பைத் தொடங்கி அதே இடத்தில் முடிவடைந்தது தற்செயலான நிகழ்வாக இருக்க முடியாது. அடுத்த கட்ட பணிக்குச் செல்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.