Connect with us
 

Reviews

ரங்கோலி – விமர்சனம் !

Published

on

Cast: Hamaresh, Muruga Doss, Prarthana, Amit Bhargav, Sanjay, Ragul, Vishwa, Akshaya Hariharan, Krithiga, Sai Sree
Production: Gopuram Studios
Director: Vaali Mohan Das
Cinematography: Marudhanayagam
Editing: R Sathyanarayanan
Music: Sundaramurthy KS
Language: Tamil
Runtime: 2 Hrs 9 Mins
Release Date: 01.09.2023

தமிழ் சினிமாவில் பள்ளிகளை மையமாக வைத்து பல நூறி திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த படத்தில் பள்ளி பருவ காதலை அதிகம் சொல்லாமல் கார்ப்பரேஷன் – கான்வென்ட் பள்ளி பிரச்சனையை பேசியுள்ளார் இயக்குநர் வாலி மோகன்தாஸ்.

கார்ப்பரேஷன் பள்ளியில் படித்த ஒரு ஏழை மாணவனுக்கு கான்வென்ட் பள்ளியில் எப்படிப்பட்ட வரவேற்பு கிடைகிறது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை அந்த சிறு வயதில் மாணவன் எப்படி பார்க்கிறான் என்பதை கொஞ்சம் உளவியல் ரீதியாக சொல்லியிருக்கிறார்.

துணி அயன் செய்யும் முகதாஸின் மகன் ஹமரேஷ் கார்ப்பரேஷன் பள்ளியில் படிக்கும் தன் மகனை கான்வென்ட் பள்ளியில் சேர்க்க ஆசைப்பட்டு அந்த பள்ளியில் ஒரு வழியாக மகனை சேர்த்து விடுகிறார். கார்ப்பரஷான் பள்ளியை விட்டு கான்வென்டிற்குச் செல்கிறார் ஹமரேஷ். அங்குள்ள மாணவர்களுடன் செட்டாகவில்லை எப்போதும் சண்டைதான் வருகிறது. தமிழ் மீடியத்தில் படித்ததால் ஆங்கில மீடியத்தில் படிக்க கஷ்டமாக உள்ளது. இதனிடையே உடன் படிக்கும் மாணவியாக பிரார்த்தனா மீது காதலும் வருகிறது. ஒரு கட்டத்தில் எதற்காக பள்ளி மாறி வந்தோம் என்பதை உண்ர்ந்து கொண்டு ஒழுங்ககாக படித்தாரா இல்லையா இவனின் வாழ்க்கை தட்டு தடுமாறி போனதா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

அறிமுக படத்தில் பள்ளி மாணவனாக நடித்திருக்கும் ஹமரேஷ் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கார்ப்பரேஷன் பள்ளியில் படித்து வளர்ந்தவருக்கு அந்த சுற்று சூழழ்தான் பிடிக்கிறது அப்பாவிம் வற்புறுத்தலின் காரணமாக கான்வென்ட் பள்ளிக்கு செல்கிறார். அங்குள்ள சூழழ் அவருக்கு ஒரு தொந்தரவாக அமைக்கிறது அதனை எதிர் கொள்ளமுடியாமல் இருக்கும் ஒரு மாணவனின் மனநிலை எப்படி இருக்கும் அதை ஹமரேஷ் நடிப்பின் மூலம் திரையில் நன்றாக வெளிப்படுத்தியுள்ளார்.

பள்ளி மாணவியாக வரும் பிரார்த்தனா ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவி மீது மாணவர்களுக்கு காதல் வரும். பார்ப்பதற்கு ஜந்தாம் வகுப்பு படிக்கும் தோற்றத்தில் இருக்கும் பிரார்த்தனா நடிப்பில் குறை கூறும் அளவிற்கு இல்லாமல் நடித்துள்ளார்.

ஹமரேஷ் அப்பாவாக வரும் ஆடுகளம் முருகதாஸ் அம்மாவாக சாய்ஶ்ரீ பிரபாகரன் அக்காவாக வரும் அஷயா ஹரிகரன் அனைவருமே பாராட்டும்படியான நடிப்பு.

கே.எஸ். சுந்தரமூர்த்தி பின்னணி இசையும் மருதநாயகம் ஒளிப்பதிவும் படத்திற்கும் இயக்குநருக்கும் பக்க பலமாக அமைந்துள்ளது.

திரைப்படம் என்றால் ஒரு இடத்தில ஏதோ ஒரு திருப்புமுனை எதிர்பாராத டுவிஸ் ஒன்று இருக்க வேண்டும் அப்படி எதுவுமே இப்படத்தில் இல்லை என்பதுதான் படம் முழுவதும் மாணவர்கள் அடித்துக்கொள்ளும் காட்சிகள் வருவதும் திரைக்கதைக்கு ஒரு தடங்களாக அமைகிறது. சில குறைகள் இருந்தாலும் கண்டிப்பாக ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்.

Continue Reading