News
மோகன் குரல் நல்லாதான் இருக்கு பின்னர் ஏன் டப்பிங் குரல் !
மோகன் சமீபத்திய யூடியூப் சேனல்காக தந்த பேட்டிலலாம் பேசறத பாக்குறப்ப அவர் குரலே நல்லாதானே இருக்கு நல்லாதான் தமிழும் பேசறாரு ஏன் அப்ப சொந்தமா டப்பிங் பேசாம விட்டாருனு இருக்கு. அப்படி ஒரு சேனல்ல பேட்டில சொன்ன ஒரு தகவல்.
நான் தமிழ்ல பண்ண முதல் முதல்ல கையெழுத்து போட்ட படம் KB சாரோட மரோசரித்திரா தமிழ் ரீமேக்கான அலைகள் எழுதிய கவிதைகள் படத்துக்காகதான். படப்பிடிப்பு கொஞ்சம் தள்ளி போய்ட்டே இருந்தது. இதுக்கு இடையில கிழக்கே போகும் ரயில் தெலுங்குல நடிக்க கூப்டாங்கனு போய்ட்டேன். அங்க கடைசியா மொட்டை அடிச்சு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல உக்காந்து போகற காட்சிய படமாக்கி அனுப்பி விட்டுடாங்க. இப்ப இங்க Kb சார் படத்துகாக ஷெட்டியூல் போட்டுட்டாருனு போய் நின்னா மொட்டையடிச்சது பாத்துட்டு யாரை கேட்டு மொட்டையடிச்சனு கெட்ட கெட்ட வார்த்தைல திட்டிட்டாரு. பிறகு சமாதானம் ஆகி முடி வளரட்டும்னு ஷுட்டிங்க தள்ளி வைச்சாரு.
அதுக்கு நடுவுல மரோசரித்திரா இங்க ரிலீஸ் ஆகி சூப்பர் டூப்பர் ஹிட்டாகிடுச்சு. இப்ப அந்த படம் வேணாம் அப்பறம் பண்ணிக்கலாம்னு விட்டுடாங்க. மகேந்திரன் நெஞ்சத்தை கிள்ளாதேல நடிக்க ஆள் தேடினப்ப அனந்து சார்தான் ரெகமெண்ட் பண்ணினாரு. அப்பறம் அக்னி சாட்சி, சிந்துபைரவி வரை கூப்டாரு பயணங்கள் முடிவதில்லைக்கு பிறகு ரொம்ப பிசியா நடிச்சிட்டே இருந்தேன் அவர் கேக்கற அவளோ நாள் குடுக்க முடியவே இல்லை.எப்பருந்தாலும் நீ என் ஹீரோனு சொல்லுவாரு.
பழைய பத்திரிக்கைல வந்த பேட்டி ஒன்னுல KB ட்ட ஏன் நீங்க அறிமுக படுத்தற நடிகர்களையே தொடர்ந்து உங்க படத்துல நடிக்க வைக்கறிங்கனு கேட்டதுக்கு KB சொன்னது, ஒருத்தர அறிமுகபடுத்திட்டோம்னு விடாம அவர் முகம் மக்கள் மனசுல பதிய வைக்கற வரை நடிக்க வைக்கனும். முகம் பதிஞ்சாதான் அவரை மக்கள் ஏத்துக்குவாங்கனு.
ஒரு வேலை அப்படி KB ட்ட அறிமுகமாகி சில படங்கள் பண்ணிருந்தா ரஜினியை போல மோகனையும் சொந்த குரல்லயே தயக்கம் இல்லாம டப்பிங் பேச வைச்சிருந்து அவர் சொந்த குரலையும் மக்கள்கிட்ட KB பதிய வைச்சிருந்திருக்கலாம்.
Continue Reading