Connect with us
 

News

மகாராஜா பட இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டிய தளபதி விஜய் !

Published

on

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் மகாராஜா.

இப்படத்தை பார்த்த தளபதி விஜய் அவர்கள் இப்படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் மற்றும் இப்படத்தின் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் ஆகியோரை நேரில் அழைத்து பாரட்டியுள்ளார்.

இது குறித்து இயக்குநர் நித்திலன் சாமிநாதன் கூறுகையில் ‘ டியர் விஜய் அண்ணா இந்த அறிவூட்டும் சந்திப்புக்கு நன்றி. உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தற்கு என்றும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். என் படம் மகாராஜா படத்தை பற்றி நீங்கள் கூறிய விவரங்கள் என்னை பெருமைப்படுத்துகின்றன. அது எனக்கு ஒரு மிகப்பெரிய பாராட்டு. உங்கள் அன்பு மற்றும் ஆதரவு ஊக்கத்திற்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன். இ லவ் யூ ணா என தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.