Connect with us
 

News

கவனம் ஈர்க்கும் ஹிப் ஹாப் ஆதி இயக்கும் கடைசி உலகப் போர் பட கிளிம்ஸ் வீடியோ !

Published

on

ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பாளராக சினிமாவில் இவரின் பயணத்தை தொடங்கியவர் பின்னர் மீசைய முறுக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளார்.

இறுதியாக இவர் நடிப்பில் வெளியா பி.டி.சார் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த நிலையில் இவர் நடிக்கும் 8வது படத்தின் அப்பேட்டை அறிவித்திருந்தார்.

இப்படத்தை இவரே இயக்கி இவரே தயாரிக்கவும் உள்ளாராம். ஹிப் ஹாப் தமிழா என்டர்டைன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை புதிதாக ஆரம்பித்துள்ளாராம்.

இப்படத்திற்கு கடைசி உலகப் போர் என பெயரிட்டுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றையும் தற்போது வெளியிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

குறிப்பாக இதில் வரும் விஎஃப் ப்க்ஸ் காட்சிகள் பார்ப்பதற்கு மிகவும் சிறப்பாக வந்துள்ளதாக ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.