News
சூர்யா, ஜோதிகா, கார்த்தி இணைந்து ரூ.50 லட்சம் நிதியுதவி !
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக நடிகர்கள் சூர்யா, ஜோதிகா ஆகியோர் இணைந்து ரூ.50 லட்சம் நிதியை நிவாரணத் தொகையாக வழங்கியுள்ளனர்.
கேரள வயநாட்டில் உள்ள மலைக்கிராமங்களில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகளால் பல மக்கள் மண்ணில் உயிரோடு புதைந்தும் பலர் வெள்ளத்தில் அடித்தும் செல்லப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி தொடர்ந்து 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 291-ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் இணைந்து கேரள முதல்-மந்திரியின் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் தொகையை வழங்கியுள்ளனர். இதற்கு முன்னதாக நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.