Connect with us
 

News

தி கோட் படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது !

Published

on

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடித்து வரும் திரைபடம் தி கோட். விஜய்யுடன் இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மோகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் விஜய் குரலில் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலாக ஸ்பார்க் என்ற பாடல் வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா மற்றும் விருஷா பாலுவும் இப்பாடலை பாடியுள்ளனர். கங்கை அமரன் இப்பாடலுக்கு வரிகள் எழுதி உள்ளார்.