Connect with us
 

Reviews

மெய்யழகன் – விமர்சனம் !

Published

on

Cast: Karthi, Arvind Swami, Rajkiran, Sri Divya
Production: Jyotika – Suriya
Director: C.Premkumar
Screenplay: C.Premkumar
Cinematography: Mahendiran Jayaraju
Editing: R.Govindaraj
Music: Govind Vasantha
Language: Tamil
Runtime: 2H 57M
Release Date: 27 September 2024

இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த சாமி நடிப்பில் சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் பிரிந்து போன இரு உறவுகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் படமாக வெளியாகி இருக்கிறது மெய்யழகன்.

இன்றைய கால கட்டத்தில் பிறந்த ஊரை விட்டு வேறு ஒரு ஊருக்கு காலத்தின் கட்டாயத்தால் போக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அப்படி பிரிந்து சென்றாலும் அங்கு இருக்கும் நம் வீடு, அங்கு நாம் பழகிய உறவினர்கள், நண்பர்கள் என அனைத்தும் நம் மனதில் என்றும் நீங்காமல் இருக்கும். அப்பிடி ஒருநாள் நாம் அங்கு சென்றால் அங்கு நமக்கு எப்படி இருக்கும் என்பதுதான் இந்த மெய்யழகன்.

படம் 1996-ம் இருந்து ஆரம்மாகிறது. குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை காரணமாக வாலிப வயதில் இருக்கும் அரவிந்த சாமி தஞ்சாவூரை விட்டு சென்னைக்கு செல்கிறார். சுமார் 22 வருடங்களுக்கு பின்னர் 2018-ல் தன் சித்தப்பா மகளின் திருமணத்திற்காக மீண்டும் தஞ்சாவூர் வருகிறார். அங்கு அவரை சந்திக்கும் கார்த்தி அரவிந்த சாமியை பார்த்ததிலிருந்து அத்தான் என விழுந்து விழுந்து கவனிக்கிறார். ஆரம்பத்தில் இது பிடிக்காமல் இருக்கிறது அரவிந்த சாமி போக போக கார்த்தியின் பாசத்தில் விழுந்து விடுகிறார். ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை கார்த்தியின் பேச்சு அவருக்கு உணர்த்துகிறது. தன்னை தனக்கே அடையாளம் காட்டிய கார்த்தி மீது அரவிந்தசாமிக்கு ஒரு மரியாதை ஏற்படுகிறது. அவர்கள் இருவரது பாசப்பினைப்பு எப்படி போகிறது என்பதுதான் மீதிக்கதை.

மெய்யழகன் யார் என்பதை எப்போது தெரிந்து கொள்கிறார் அரவிந்தசாமி என்பதுதான் படத்தில் இருக்கும் சஸ்பென்ஸ் படத்தின் மொத்த திரைக்கதை. படம் முழுவதும் கார்த்தி அந்த கதாப்பாத்திரமாக நடித்தார் என்று சொல்ல முடியாது. அவரின் நடிப்பில் வெளியான பருத்தி வீரன், கடைக்குட்டி சிங்கம் படங்களுக்கு பின்னர் இப்படமும் பெயர் சொல்லும் படமாக அமையும்.

அருள்மொழி என்ற கதாப்பாத்திரத்தில் வரும் அரவிந்தசாமி பல மொழிகலையும் வெளிப்படுத்தி உள்ளார். அதிலும் படத்தில் வரும் முக்கியமான இரண்டு காட்சிகள் படம் பார்த்து முடித்து விட்டு வீடு வந்தாலும் மறக்காமல் நம் மனதோடு இருக்கும்.

படம் முழுவதும் கார்த்தி – அரவிந்தசாமி இருவரும் ஆக்கிரமைப்பு செய்கிறார்கள். இருந்தாலும் அதில் கிடைத்த இடங்களில் அழகாய் நடித்திருக்கிறார்கள் ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா, ஜெயப்பிரகாஷ், ஆகியோர்.

நீடாமங்கலம் ஊரில் ஓர் இரவில் நடக்கும் காட்சிதான் ஒட்டு மொத்த படமும் இவை எல்லாம் நமக்கு அழகாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜு, கோவிந்த் வசந்தா பின்னணி இசை உறவுகளின் உணர்வுகளோடு உறவாடினாலும் கமல்ஹாசன் பாடிய யாரோ இவன் யாரோ மட்டும் மனதில் பதிகிறது.

சுமார் 3 மணிநேரம் ஓடும் படம் சில இடங்களில் நமக்கு சலிப்பை கொடுக்கிறது. படத்தின் நீளத்தை தாராளமாக வெட்டி எடுத்திருக்கலாம். படத்தின் முதல் பாதி போவதே தெரியவில்லை. இரண்டாம் பாதி முழுவதும் இருவரும் மட்டுமே பேசிக்கொண்டிருப்பது நம் பொறுமையை சோதிக்கிறது.

படத்தின் பலவீனம் என்றால் கார்த்தி சொல்லும் பிளாஷ்பேக் கதையில் ஜல்லிக்கட்டு, தூத்துக்குடி துப்பாக்கி சூடு, இலங்கை விவகாரம் என எல்லாமே திணித்தது போல தெரிகிறது.