Trailer
மெர்ச்சி சிவா நடிக்கும் சூது கவ்வும் 2 டிரைலர் வெளியானது !
நடிகர் சிவா நடிக்கும் சூது கவ்வும் 2 திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. கடந்த 2013-ம் வருடம் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேட்பையும் மாபெரும் வசூலையும் குவித்தது.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ள நிலையில் இதில் நாயகனாக மிர்ச்சி சிவா நடித்துள்ளார். இப்படத்தை எஸ்.ஜே.அர்ஜுன் என்பவர் இயக்கியுள்ளார். முதல் பாகத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவாவுடன் இபப்டத்தில், ஹரிஷா, ராதாரவி, கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், கராத்தே கார்த்தி, ரமேஷ் திலக், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
டிசம்பர் 13-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.