Connect with us
 

News

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி !

Published

on

அஜித் குமார் தற்போது நடித்து வரும் விடாமுயற்சி படம் இருக்கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் இறுதிக்கட்டம் தாய்லாந்தில் நடைபெறவுள்ளது. சுமார் 6 நாட்கள் நடைபெறும் படப்பிடிப்புடன் ஒட்டு மொத்த படப்பிடிப்பும் நிறைவு பெறுகிறது.

இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அஜித் – த்ரிஷா உள்ளிட்ட நடிகர்கள் பங்குபெறுகிறார்கள். அத்துடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவு பெற்றுவிடும். அதன் பின்னர் இறுதிக்கட்ட பணிகளில் முழு கவனத்தையும் படக்குழு செலுத்த உள்ளது.

அடுத்த வருடம் ஜனவரி 10-ம் தேதி இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படம் ஹாலிவுட்டில் வெளியான பிரேக் டவுன் என்ற படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.