Connect with us
 

Reviews

கேம் சேஞ்ஜர் திரைவிமர்சனம் !

Published

on

Cast: Ram Charan, Kiara Advani, Anjali, Samuthirakani, S J Surya, Srikanth, Sunil, Jayaram, Naveen Chandra,
Production: Raju, Shirish, Zee Studios
Director: S. Shankar
Screenplay: Vivek
Cinematography: S Thirunavukkarasu
Editing: Shameer Muhammed, Antony Ruben
Music: Thaman S
Language: Telugu, Tamil
Runtime: 2H 45 Mins
Release Date: 10 January 2025

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் கேம் சேஞ்ஜர்.ராம் சரண் ஒரு நேர்மையான IAS அதிகாரியாக தன் மாவட்டத்தில் நடக்கும் அத்தனை அநியாயங்களையும் தட்டி கேட்கின்றார். அதே நேரத்தில் முதலமைச்சர் தன் மாநிலத்தில் எந்த ஒரு குற்றமும் நடக்கக்கூடாது என்று ஒரு அதிரடி திட்டத்தை கொண்டு வருகிறார்.இதனால் CM மகனான எஸ் ஜே சூர்யாவின் மணல் கொள்ளை பாதிக்கப்படுகிறது, முதலமைச்சருக்கு தெரியாமல் இரவில் மணல் எடுக்கலாம் என்று பார்த்தால், ராம் சரண் அதற்கு தடையாக இருக்கிறார்.

இதனால் ராம் சரணுக்கும், எஸ் ஜே சூர்யாவுக்கும் மோதல் ஏற்பட, ஒரு கட்டத்தில் முதலமைச்சரை பதவிக்காக எஸ் ஜே சூர்யா கொல்லவும் செய்கிறார், அதோடு ராம் சரணை கொல்லவும் திட்டமிடுகிறார்.ஆனால், இறப்பதற்கு முன்பு முதலமைச்சர் ஒரு வீடியோவில் அடுத்த CM யார் என்பதை வெளியிட, அதை பார்த்த ஒட்டு மொத்த மாநிலம் மற்றும் எஸ் ஜே சூர்யாவும் ஷாக் ஆக, அதன் பின் ராம் சரண், எஸ் ஜே சூர்யா மோதல் மேலும் பல மடங்கு ஆக, பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

படம் எப்படி இருக்கு, இந்தியன் 2′ படத்திற்குப் பிறகு, ஷங்கரின் எழுத்தும், இயக்கமும் குறைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் மூலம், அரசியல் பின்னணியில் நிகழும் கதைகளை இணைத்து கமர்ஷியல் படங்களை எடுப்பதில் ஷங்கர் மீண்டும் தான் ஒரு மாஸ்டர் என்பதை மீண்டும் நிரூப்பித்துள்ளார்.

ராம் சரண் போன்ற நடிப்பு இந்த படத்தில் மேலும் ஒரு படி உயர்ந்துள்ளது. படத்தில் சில இடங்களில் தொய்வு ஏற்படும் போது , ராம் சரணின் நடிப்பு படத்தைத் தாங்கி பிடிக்கிறது.
அப்பண்ணாவின் கேரக்டர் ராம் சரணின் கேரியரில் இன்னொரு மைல் கல்லாக நிற்கிறது. எமோஷனல் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அஞ்சலி நடிப்பில் அப்லாஸ் அள்ளுகிறார். அஞ்சலியை இன்னும் பல வருடங்கள் தாங்கும் கதாப்பாத்திரமாக இருக்கும்.

எஸ்.ஜே. சூர்யா சூப்பர் வில்லன் கதாப்பாத்திரத்தில் மீண்டும் மிரட்டி எடுத்துள்ளார். அவரும் ராம் சரணும் பேசி கொள்ளும் காட்சிகளில் தியேட்டரில் விசில் பறக்கிறது.

தமனின் இசையில் தொப், ஜருகண்டி பாடல் அட்டகாசம், இரண்டும் விண்டேஜ் ஷங்கர் டச். பின்னணி இசை கொஞ்சம் இரைச்சலை குறைச்சு இருக்கலாம்.

படத்தின் ஒளிப்பதிவு வழக்கம் போல் பல பிரமாண்ட கூட்டம், செட் என அனைத்தையும் அத்தனை அழகாக காட்டியுள்ளனர்.

பிளஸ்

படத்தின் முதல் பாதி ராம் சரண் மொத்த படத்தையும் தாங்கி செல்கிறார். தேர்தல் ஆணையர் முக்கியத்துவத்தை மக்களுக்கு சொன்ன விதம்.

மைனஸ்

ஷங்கரின் திரைக்கதை , லாஜிக் எல்லை மீறல்கள்.

Rating 3/5