Connect with us
 

Reviews

வணங்கான் திரைவிமர்சனம் !

Published

on

Cast: Arun Vijay, Roshni Prakash, Samuthirakani, Mysskin, Ridha, Chhaya Devi, Bala Sivaji, Shanmugarajan,
Production: Suresh Kamatchi
Director: Bala
Cinematography: R. B. Gurudhev
Editing: Sathish Suriya
Music: G V Prakash Kumar
Language: Tamil
Runtime: 2H o2 Mins
Release Date: 10 January 2025

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் வணங்கான். மேலும் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் .இப்படத்தை V House Productions சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

சுனாமியால் பெற்றோர்களை இழந்த இரண்டு வெவ்வேறு குழந்தைகள் இணைந்து வளர்கின்றார்கள். அவர்களில் ஒருவர் அருண் விஜய் ஏற்று நடித்துள்ள கோட்டி கதாபாத்திரம், மற்றொருவர் அவரது தங்கை தேவி கதாபாத்திரம். இதில் கோட்டிக்கு பிறவியில் இருந்தே காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. முறையான வேலை எல்லாம் எதுவும் இல்லாமல், கிடைக்கின்ற அனைத்து வேலைகளையும் செய்யக்கூடியவர்.

தவறு எனத் தெரிந்தால் கோபப்படக்கூடியவரான அருண் விஜய் மற்றும் அவரது தங்கைக்கு ஆதரவாக, அங்கே இருக்கக்கூடிய அருட்தந்தை உள்ளார். கோட்டி, கோபத்தில் யாரையாவது அடித்து அது போலீஸ் பிரச்னையாகிவிட்டால், அவரை ஜாமீனில் எடுத்து அறிவுரை கூறுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அதேபோல், கோட்டி மீது சிறு வயதில் இருந்தே காதல் கொண்டவராக டீனா கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இவர் பல மொழிகள் கற்றவராகவும், கன்னியாகுமரியைச் சுற்றிப் பார்க்க வரும் பக்தர்களுக்கு திருவள்ளுவர் குறித்தும் விவேகானந்தர் குறித்தும் விளக்கிக் கூறக்கூடியவராக உள்ளார்.

எதெற்கெடுத்தாலும் கோபப்படும் கோட்டியை, மாற்றுத் திறனாளிகள் காப்பகத்தின் காவலர் பணியில் சேர்த்து விடுகின்றார், அருட்தந்தை. அந்த காப்பகத்தில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது அன்பிற்குரியவராக மாறுகின்றார். கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளி பெண்கள் குளிப்பதை மூன்று பேர் பார்க்கின்றார்கள். இதனைக் கண்டுபிடித்த மாற்றுத் திறனாளி பெண்கள், தாங்கள் குளிப்பதை யாரோ பார்த்துவிட்டார்கள் என கோட்டியிடம் கூற, அதன் பின்னர் கோட்டி அவர்களை கொலை செய்கின்றான். மேலும் காவல் நிலையத்தில் தானே சரண்டரும் ஆகின்றார். கொலைக்கான காரணத்தை சொல்ல மறுக்கும் கோட்டி, அவரிடம் இருந்து உண்மையை வாங்க முயற்சிக்கும் காவல்துறை அதிகாரி சமுத்திரக்கனிக்கு பதில் கிடைத்ததா இறுதியில் என்ன ஆனது என்பது மீதிக்கதை.

மேலும் படத்தின் திரைக்கதையைப் பொறுத்தவரையில், பாலா தனது வழக்கமான பாணியைத்தான் பின்பற்றியுள்ளார். குறிப்பாக, சீரியஸான கதையை இலகுவாக்கி கொண்டு செல்ல நகைச்சுவைக் கதாபாத்திரம், சீரியஸான கதாநாயகன், கதாநாயகனுக்கு என்று ஒரு நியாயம், தர்மம் என வழக்கமான திரைகக்தையை கையாண்டு இருந்தாலும் அதில் இன்னும் எதாவது புதுமை புகுத்தியிருக்கலாம். படம் முழுவதும் வரும் சைகை மொழி அதனை ரசிகர்களுக்கு புரியவைக்க ஏதுவான வசனங்களை அமைத்ததும், காட்சிகளை நகர்த்திச் சென்றதும் அருமை.

படம் எப்படி இருக்கு

இயக்குநர் பாலா எடுத்துக்கொண்ட கதைக்களத்திற்கு முதல் பாராட்டுக்கள். சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை சுட்டிக்காட்டி, அதற்கு தண்டை இப்படித்தான் இருக்க வேண்டும் என திரைக்கதையை நேர்த்தியாக கொண்டு சென்ற விதம் சிறப்பாக இருந்தது.

ஹீரோ அருண் விஜய் நடிப்பு வேற லெவல். வாய் பேச இயலாதவராக நடித்து நம்மை கலங்க வைத்துவிட்டார். ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்கிறார். குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் இவருடைய நடிப்பு மனதை தொடுகிறது.

மேலும் இவருடன் இணைந்த நடித்த நடிகைகள் ரோஷ்ணி பிரகாஷ், ரிதா ஆகியோரின் நடிப்பு சிறப்பாக இருந்தது. அதே போல் சாயா தேவி, பாலசிவாஜி, சண்முகராஜன் ஆகியோரின் நடிப்பு திரைக்கதையோடு ஒன்றிப்போகிறது. கௌரவ வேடத்தில் தோன்றிய மிஷ்கின் மற்றும் சமுத்திரக்கனியின் கதாபாத்திரங்களும் சிறப்பு.

இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படத்தின் மிகப்பெரிய பலம்.
குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டார் பாலா. கண்டிப்பாக அருண் விஜய் மற்றும் பாலா இருவருக்கும் தேசிய விருது கிடைக்க வேண்டும். தன்னைச் சுற்றி நடக்கும் கொடுமைகளை ஒருவன் தட்டிக் கேட்டால், அவனுடன் இந்த சட்டமும் நிற்கும் என காட்டிய விதம் பாராட்டுக்குரியது

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் பாடல்கள் சிறப்பு. சாம் சி.எஸ் பின்னணி இசை மிரட்டலாக இருந்தது.

பிளஸ்

அருண் விஜய் நடிப்பு.பாலாவின் இயக்கம் மற்றும் திரைக்கதை.

மைனஸ்

சில அந்தரங்கம் காட்சிகள் முகம் சூலிக வைக்கிறது.

Rating 3/5