Reviews
விடாமுயற்சி திரைவிமர்சனம் !

Cast: Ajith Kumar, Arjun, Trisha, Regena Cassandrra, Aarav, Nikhil Nair, Dasarathi, Ganesh
Production: Lyca Productions
Director: Magizh Thirumeni
Cinematography: Om Prakash ISC
Editing: NB Srikanth
Music: Anirudh Ravichander
Language: Tamil
Runtime: 2H 34Mins
Release Date: 6 February 2025
அஜித் 2 வருடங்கள் கழித்து மீண்டும் விடா முயற்சி மூலம் திரையில் தோன்ற, அதிலும் மகிழ் திருமேணி என்ற தரமான இயக்குனர் கூட்டணியுடன் வர, அஜித் ரசிகர்கள் தாண்டி ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் காத்திருக்க, அவர்கள் எல்லோரின் காத்திருப்புக்கும் விடாமுயற்சி விருந்து வைத்ததா பார்ப்போம்.
கதை களம்
அர்ஜுன் (அஜித் குமார்), கயல் (த்ரிஷா) இருவரும் 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துக் கொள்கின்றனர். 12 ஆண்டுகள் கழித்து கயலுக்கு இன்னொருவர் மீது காதல் ஏற்பட்டு விட்டதால் அர்ஜுனை பிரிய முடிவு செய்கிறார். விவாகரத்துக்கு அப்ளை செய்த நிலையில், விவாகரத்து வழக்கு முடியும் வரை அம்மா வீட்டுக்குப் போறேன் என்று சொல்ல, சாலை வழியாக காரில் போகலாம். கடைசி ரோடு ட்ரிப் என அழைத்துச் செல்லும் அஜித்தின் கார் பிரேக்டவுன் ஆக உதவ வரும் அர்ஜுன் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா ஜோடி த்ரிஷாவை கடத்த அதற்கு பின்னணியில் இருப்பது யார்? காணாமல் போன தனது மனைவியை அஜித் கண்டு பிடித்தாரா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை. பிரேக்டவுன் பார்த்தவர்களுக்கு இந்த படத்தின் கதை நன்றாகவே அத்துப்படி ஆகியிருக்கும் என்பது தனிக்கதை.
படம் எப்படி இருக்கு
அஜித் இப்படி ஒரு மாஸ் ஹீரோ இந்த கதைக்களத்தை தேர்ந்தெடுத்தற்காகவே பாராட்டலாம், அதை விட இந்த கதாபாத்திரம், ஒரு நார்மல் மனிதன் பிரச்சனை வந்தால் அவன் தெம்புக்கு என்ன செய்வானோ அப்படி இதை உருவாக்கியதற்கே மகிழ் திருமேனிக்கு பாராட்டுக்கள்.
அஜித்-திரிஷா இருவரின் ஜோடியும் திரையில் அத்தனை அழகு, அதிலும் இளமை தோற்றத்தில் அஜித் தோன்றும் காட்சி சூப்பர், திரிஷா தன் வீட்டிற்கு போக வேண்டும் என கூறி இருவரின் பயணம் ஆரம்பித்ததும் மெல்ல கதை சூடு பிடிக்கிறது.அதிலும் ஆரவ் கேங் செய்யும் அட்டகாசம், அதை தொடர்ந்து அர்ஜுன், ரெஜினா வருகை, திரிஷா காணாமல் போவது என ஒரு பதட்டம் படத்தில் இருந்துக்கொண்டே உள்ளது, ஆனால், காட்சிகள் கொஞ்சம் மெதுவாகவே நகர்வது சினிமா ரசிகர்கள் தாண்டி ஆலுமா டோலுமா எதிர்பார்க்கும் அஜித் ரசிகர்களுக்கு கொஞ்சம் பொறுமையை சோதிக்கும் தான்.
மேலும், அர்ஜுன் ரெஜினா பேக் ஸ்டோரி மகிழ் பேட் மேன் படத்தில் வரும் ஜோக்கர், ஹார்லி குயில் போல் உருவாக்கியுள்ளார், அதிலும் ரெஜினா தன் தோழியை கொலை செய்யும் காரணம் எல்லாம் பெரும் சைக்கோதனத்தை காட்டியுள்ளார்.
படத்தின் மிகப்பெரிய பலம் அனிருத் இசை, மெதுவாக நகரும் காட்சிகளை கூட தன் பின்னணி இசையால் தாங்கி புடித்துள்ளார், அதிலும் அஜித்தே என்று கத்துவது போல் அவர் போட்ட இசை, தியேட்டர் அதிர்கிறது, கிளைமேக்ஸ் பத்திகிச்சு சாங் ரசிகர்களுக்கு விருந்து.
அதே நேரத்தில் அஜர்பைஜான் லாண்ட்ஸ்கேப்-யை அத்தனை அழகாக காட்டியுள்ள ஓம் பிரகாஷையும் பாராட்டாமல் இருக்க முடியாது, மேலும் ஆரவ்-வுடன் காரில் நடக்கும் சண்டைக்காட்சி சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் க்ளாஸ்.
என்ன தான் படம் என்கேஜிங் ஆக போனாலும், பல இடங்களில் பொறுமையை சோதிக்கும் மெதுவாக நகரும் காட்சிகள் இருப்பதையும் சொல்லியே ஆகவேண்டும், இரண்டாம் பாதி இன்னமும் மகிழ் கவனம் செலுத்தியிருக்கலாம் திரைக்கதையில்.
பிளஸ்
ஆஜித் குமார், மகில் திருமேனியின் திரைக்கதை மற்றும் கதை. ஆனிருத்த இசை
மைனஸ்
முதல் பாதியில் கதை சற்று மெதுவாக சென்றது.
Rating 4.5/5