Reviews
ஃபயர் – விமர்சனம் !
![](https://cinetimee.com/wp-content/uploads/2025/02/Movie-Review-.psd-1.jpg)
Cast: Balaji murugadoss, Chandini Tamilarasan, Sakshi agarwal, Rachitha mahalakshmi, Gayathri shan, JSK
Production: JSK
Director: JSK
Screenplay: SK jeeva
Cinematography: Sathish.G
Editing: CS premkumar
Music: DK
Language: Tamil
Runtime:
Release Date: 14 February 2025
தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஜேஎஸ்கே சதீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஃபயர் . காதலர் தினத்தை முன்னிட்டு இந்த வாரம் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சி சென்னையில் நடைபெற்றது. ஃபயர் படத்தில் பாலாஜி முருகதாஸ், சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், ரச்சிதா மகாலட்சுமி, காயத்ரி ஷான், ஜேஎஸ்கே சதீஸ், சிங்கம்புலி, எஸ்.கே.ஜீவா, சுரேஷ் சக்ரவர்த்தி, அனு விக்னேஷ், குழந்தை மனோஜ் ஆகியோர் நடித்துள்ளனர். சதீஷ் ஒளிப்பதிவு செய்ய, சி எஸ் பிரேம்குமார் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தை ஜேஎஸ்கே சதீஸ் தயாரித்தும் இயக்கியும் நடித்தும் உள்ளார்.
கதை களம்
இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார் பாலாஜி முருகதாஸ். அவன் பல பெண்களிடம் மென்மையாக பேசி, அவர்களின் பலவீனத்தை தட்டி சரியான நேரத்தில் அவர்களை சூறையாடுவது தான் பாலாஜியின் வேலை. நடிகர் பாலாஜி (காசி ) அவனுது வலையில், ரச்சிதா மகாலட்சுமி, சாந்தினி தமிழரசன், காயத்ரி, சாக்ஷி அகர்வால் என நான்கு பேர் விழுகின்றனர் மேலும் பல பெண்கள் உள்ளனர் .
அவர்களை பாலாஜி சூறையாடி விடுகிறான். இவனிடம் இருந்து இந்த நான்கு பெண்கள் எப்படி விடுபடுகிறார்கள், அவனுக்கு என்ன தண்டனை கிடைக்கிறது என்பது தான் படத்தின் கதை. இந்த திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பவர் ஜே எஸ் கே சதீஷ்குமார்.
அதேபோல பாலாஜி முருகதாஸ் ஆன்ட்டி ஹீரோவாக, இந்த பூனையும் பாலை குடிக்குமா என்ற கேரக்டரில் அழகாக நடித்திருக்கிறார். பாலாஜி எப்படி பெண்களை ஏமாற்றுகிறார் இவரது தகிடுதத்தம் என்ன என்பதை துப்பறிந்து ஆராய்ந்து கண்டுபிடிக்கிறார ஜே எஸ் சதீஷ்குமார் என்பது மீதி கதை.
படம் எப்படி இருக்கு:
இந்த ஃபயர் திரைப்படத்தில் பெண்களை சீரழிக்கும் சண்டாளனாக பாலாஜி முருகதாஸ் மாறி இருக்கிறார். தன்னுடைய கதாபாத்திரம் உணர்ந்து அழகாக நடித்திருக்கிறார் பாலாஜி, இந்த திரைப்படத்தின் மூலம் அவருக்கு நிறைய படங்களில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும்.
சின்னத்திரை சரோஜாதேவி என்று அனைவராலும் போற்றப்பட்ட ரச்சிதா மகாலட்சுமி, படத்தில் ஒரு பாடல் காட்சியில், ஆடைகளை குறைத்து அத்துமீறி மிகவும் கிளாமராக நடித்திருக்கிறார். ரச்சிதா மகாலட்சுமியின் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை பார்த்தவுடன் மெய் மறந்து உச்சி கொட்டும் அளவிற்கு இந்த படத்தில் படு கிளாமராக நடித்திருக்கிறார் ரச்சிதா.
இதை தொடர்ந்து படத்தில் பாடல் ,திரைக்கதை சொல்லும் படி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் ஃபயர் படம் முழுக்க கவர்ச்சி என்று சொல்லிவிட முடியாது, ஒரு சில இடங்களில் நேரத்தை தவிதிருக்கலாம் தேவைக்கு ஏற்ப கவர்ச்சி இருக்கிறது இருந்தாலும் இந்த படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் தான் கொடுத்துள்ளது.
கவர்ச்சியை விருப்பி பார்ப்பவர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும் அந்த அளவிற்கு படத்தில் ஃபயர் இருக்கிறது. ஃபயர் படம் உங்களை குஷிப்படுத்தும், கிளுகிளுப்பாக்கும், மகிழ்விக்கும்.மேலும் படம் முடிவில் செம்ம டுவிஸ்ட் இருக்கு. அதை யாரும் கணிக்க முடியாதளவில் இறுந்தது.
மொத்ததில் ஃபயர் ஒரு கவர்ச்சிகரமான ஃபயர் படம்
பிளஸ்
ஜே எஸ் சதீஷ்குமார் நடிப்பு , ரச்சிதா நடிப்பு
மைனஸ்
படத்தின் 2nd half முழுவதும் முழுக்க கவர்ச்சி. திரைக்கதை மற்றும் எடிட்டிங்.
Rating 2.5/5