News
விஜய் ஆண்டனி நடிக்கும் 26-வது படத்தின் அறிவிப்பு !

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜய் ஆண்டனி பின்னர் நடிகராக அறிமுகமாகி சலீம், பிச்சக்காரன் என பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் வெற்றி பட ஹீரோவாக வலம் வருகிறார். தற்போது இவர் நடிப்பில் ககன மார்கன், வள்ளி மயில், அக்னி சிறகுகள், சக்தி திருமகன் போன்ற படங்கள் வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிக்கும் 26-வது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 19-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
இப்படத்தை விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன் நிறுவனம் தயாரிக்கிறது.