Connect with us
 

Trailer

கமல்ஹாசன் – சிம்பு மோதும் தக் லைப் டிரெய்லர் வெளியானது !

Published

on

இயக்குநர் மணிரத்னம் – உலக நாயகன் கமல்ஹாசன் இருவரும் சுமார் 36 வருடத்திற்கு பின்னர் இணைந்திருக்கும் திரைப்படம் தக் லைப். கமல்ஹாசனுடன் இப்படத்தில் சிலம்பரசன், த்ரிஷா, ஜோஜு ஜோர்ச், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் ஆகியோர் நடித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனனும் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இபப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. அதில் சிலம்பரசன் கமல்ஹாசனின் வளர்ப்பு மகன் போல காட்டப்படுகிறது. ஒரு கட்டத்தில் சிம்பு கமல் ஹாசனின் இடத்தை பிடிக்க ஆசைப்படுகிறார். அப்போது இருவருக்கும் ஏற்படும் மோதல்தான் இப்படத்தின் மையக்கரு என்று ட்ரைலர் பார்க்கும் போது நன்றாக தெரிகிறது.

அப்படி பார்த்தால் சிம்பு வில்லன் வேடமாக இருக்குமோ என்று நினைக்க தோன்றுகிறது. தற்போது இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பையும் அதிகரிக்க வைத்துள்ளது.