Connect with us
 

News

சிவகார்த்திகேயனுடன் இணையும் இரும்புத்திரை இயக்குநர்

Published

on


சிவகார்த்திகேயன் – பொன்ராம் இயக்கத்தில் நடித்த சீமராஜா திரைப்படம் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில். இதையடுத்து இயக்குநர் ரவிக்குமார் மற்றும் ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இதை அடுத்து இவர் இரும்புத்திரை வெற்றி இயக்குநர் பி.ஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.இதை 24AM Studios தயாரிக்க உள்ளது. இதற்கு முன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ,வேலைக்காரன், மற்றும் சீமராஜா படங்களை மிக பிரம்மாண்டமான முறையில் தயாரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படமும் ஒரு விறுவிறுப்பான த்ரில்லர் திரைப்படமாக இருக்கும் என்கிறார் இயக்குநர் மித்ரன் அவர்கள். இந்த படத்தை நான் இரும்புத்திரை படத்தின் வெளியீட்டுக்கு முன்னரே சிவாவிடம் கூறினேன் அவரும் மிக ஆர்வமாக இந்த படத்தை கேட்டு வியந்து போனார்.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர் , நடிகைகள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்களின் பெயர்கள் அதிகார்வபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.