Connect with us
 

News

ஜனவரி 20 ஆரம்பமாகும் தளபதி 63 படப்பிடிப்பு

Published

on

சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக இயக்குநர் அட்லீ இயக்கம் படத்தில் நடிக்கவிருக்கிறார் நடிகர் விஜய். இன்னமும் பெயர் வைக்கப்படாத இந்த படத்திற்கு தளபதி 63 என்று அழைத்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 20 முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது என்ற அதிகார்வப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்கள் இணையும் மூன்றாவது படம் இது இதற்கு முன் வில்லு , சிவகாசி ஆகிய படங்களின் இனைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடன் விவேக் மற்றும் யோகி பாபு ஆகிய இருவரும் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படம் ஒரு விளையாட்டு சார்ந்த படம் என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயமே இதை விஜய் ஒரு பயிற்சியாளராக வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இதற்காக விஜய் பல பயிற்சிகள் எடுத்து உடலை மிகவும் மிடுக்காக மாற்றி விட்டார் என்பது ஒரு கூடுதல் தகவல்.

கடந்த ஒரு சில வருடங்களாக விஜய் அவர்களின் படம் தீபாவளி திருநாள் அன்றே திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கிறது அதே போல் இந்த படமும் வருகிறது தீபாவளி அன்று வெளியாகும் என எதிர் பார்க்கலாம்.