Connect with us
 

News

நயன்தாராவின் ஐரா படத்தின் டிரெய்லர் தேதி அறிவிப்பு

Published

on

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்து மார்ச் 28ம் தேதி வெளியாக உள்ள த்ரில்லர் & சஸ்பென்ஸ் திரைப்படம் ஐரா இதில் பத்திரியைக்காளர் – ஒரு சாதாரண குடும்ப பெண் என இரு வேறு பட்ட வேடங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரெய்லரை வரும் புதன் கிழமை மாலை 5 மணிக்கு இணையதளங்களில் வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது. இந்த ஆண்டு தொடக்கமே நயன்தாரா அஜித் குமாருடன் விஸ்வாசம் படத்தில் நடித்து வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இந்த ஐரா வெளியாகிறது இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாக்கி உள்ளது.

கலையரசன், யோகோ பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சர்ஜூன் இயக்கியுள்ளார், பிரியங்கா ரவீந்திரன் திரைக்கதை எழுதியுள்ளார், சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில் கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.