News
உண்மை என்றவென்றால் நான் என்ன கதை எழுதினாலும் என் கண் முன் வருவது தளபதி விஜய் அவர்கள்
இயக்குநர் அட்லீ – தளபதி விஜய் மூன்றாவது முடியாக இணைந்துள்ள படம் பிகில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் அட்லீ பேசியதாவது.
தெறி படத்தை விட இந்த படம் இரண்டு மடங்காவும்.மெர்சல் படத்தை விட முன்று மடங்காவும் இந்த பிகில் இருக்கும் என் நான் நம்புகிறேன் நீங்க அதை படம் பார்த்து விட்டு கூறுங்கள்.
உண்மையாகவே மெர்சல் படத்தை இயக்கிய பிறகு என ஒரு மிக பெரிய நடிகர்கள் கூட்டத்தை வைத்து படம் எடுக்கும் வாய்ப்பு இந்த படத்தில் கிடைத்தது. உண்மை என்றவென்றால் நான் என்ன கதை எழுதினாலும் என் கண் முன் வருவது தளபதி விஜய் அவர்கள் மட்டும்தான். அதனாலதான் நான் விஜய் அண்ணா கூட மீண்டும் மீண்டும் படம் செய்ய விரும்புகிறேன்.
வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால் என் அண்ணனுக்கு மட்டும்தான் படம் எடுப்பேன் வேறு யாருக்கும் நான் படம் எடுக்க மாட்டேன் இதன் என் மன நிலை. எனக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா அவர்களுக்கும் இப்படத்தில் நிறைய வாக்குவாதம் நடைபெற்றது.அது ஒரு அக்கா-தம்பி இருவருக்கும் இடையில் நடக்கும் வாக்குவாதமே இதுபோன்ற நேரத்தில் அப்பா கல்பாதி அகோரம் அவர்கள் எங்களை சமாதானப்படுத்துவார்.
விஜய் அண்ணா இந்தியாவிலேயே சிறந்த டான்ஸர், அவர் ஒரு மிகப்பெரிய மாஸ் நடிகர். அவருடன் தொடர்ச்சியாக பணிபுரிவது எனக்கு பெருமை.