Connect with us
 

News

விஜய்க்கு வில்லன் விஜய் உறுதி படுத்திய தளபதி 64 படக்குழு

Published

on

அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து முடித்து விட்ட நிலையில் அடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி அனைவரும் அறிந்ததே. சேவியர் பிரிட்டோ பிலிம் கிரியேட்டர் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படம் 2020ம் ஆண்டின் கோடைவிடுமுறை தினத்தில் வெளியாகும்.

பிகில் படத்தின் வெளியீட்டுக்கு முன்னரே இந்த படத்தின் அறிக்கை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தது படக்குழு இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பேட்ட படத்தில் நடித்த மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

விக்ரம் வேதா , பேட்ட படத்தில் வில்லனாக மிரட்டியா மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க சுமார் 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்க உள்ளதாக அந்த ஒப்பந்த பத்திரத்தில் இருந்ததாகவும் அதில் விஜய் சேதுபதி கையெழுத்து போட்டார் என்ற தகவலும் நமக்கு கிடைத்துள்ளது.