Connect with us
 

News

தளபதி நடிக்க மறுத்த கதையை மீண்டும் இயக்கம் கவுதம் மேனன்

Published

on

தளபதி விஜய் அவர்களை வைத்து இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்க இருந்த படம்தான் ’யோகன் அத்தியாயம் ஒன்று’ இந்த படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் உள்ள நகரில் இந்த படத்தை படமாக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகளும் நடைபெற்று படப்பிடிப்பு நடத்தும் இடங்களும் பார்த்து அதற்காக பல சில கோடிகளை செலவு செய்தது தயாரிப்பு நிறுவனம்.

ஆனால் இதில் நடிக்கவிருந்த தளபதி விஜய் திடீரென படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனால் இந்த படம் முழுவதுமாக டிராப் ஆனது இது நடந்த ஆண்டு 2012-ம் ஆண்டு ஆகும்.

இந்த நிலையில் தற்போது சுமார் 6 ஆண்டுகள் கழித்து இந்த படத்திற்கு உயிர் கொடுத்துள்ளார் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன். விஜய் நடிக்க வேண்டிய வேடத்தில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்களின் நெருங்கிய உறவினர் வருண் என்பவர் நடிக்கிறார். இந்த படத்தை பல வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்து கொண்டிருக்கும் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ளது.

தற்போது இப்படத்தின் முதற்க்ட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை 7 மணியளவில் இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ட்ஸ் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது இதற்க்கு ‘Joshuva இமைபோல் காக்க’ என்று டைட்டில் வைத்துள்ளார் கவுதம். மேலும் இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்றும் இந்த படம் வரும் காதலர் தினத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading