Connect with us
 

News

காதலர் தினத்தை முன்னிட்டு டிரீட் அக வரும் “சூரரை போற்று” படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்.

Published

on

சூர்யாவுக்கு கடந்த ஆண்டு ரிலீஸான படங்கள் என் ஜி கே மற்றும் காப்பான் . இதில் காப்பான் படம் வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் ” சூரரை போற்று ” படத்தில் நடித்து வருகிறார்.

நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். கருணாஸ், ஜாக்கி ஷராப் , மோகன் பாபு உள்பட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் கதை ஏர் டெக்கான் நிறுவனர் ஜி ஆர் கோபிநாத்தின் பியோப்பிக் என்பது குறிப்பிடத்தக்கது.

“சூரரை போற்று ” படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன . சூர்யாவின் சொந்த நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் இந்தப் படத்தை தயாரிக்கிறது .

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்தப் படத்தில் இடம் பெற்ற “மாறா தீம்” என்ற பாடல் வெளியாகி ஹிட்டானது . இந்தப் பாடலை சூர்யா பாடியுள்ளார் . தற்போது இரண்டாவது சிங்கிள் ட்ராக் “வெய்யொன் சில்லி ” வெளியாக உள்ளது. இப்பாடல் வரும் 13ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர் . இந்த டிவிட்டை பார்த்த சூர்யா ரசிகர்கள் குஷியாகி இருக்கிறார்கள்.

By : Saranya