Connect with us
 

News

ரசிகர்களுடன் மாஸாக எடுத்த மாஸ்டர் செல்ஃபி !

Published

on

மாஸ்டர் படப்பிடிப்பின் போது ரசிகர்களுடன் தளபதி விஜய் எடுத்த செல்ஃபி விடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி , மாளவிகா மோகன் , ஆண்ட்ரியா , சாந்தனு, அர்ஜுன் தாஸ், ரம்யா, கௌரி கிஷன், சௌந்தர்யா,உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் படம் ” மாஸ்டர்” .

இந்தப் படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என் எல் சியில் தற்போது ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. மாஸ்டர் படப்பிடிப்புக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இதனால் விஜய் ரசிகர்கள் ஆதரவாக என் எல் சி யில் திரண்டனர்.

விஜய்யை பார்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. ரசிகர்களுடன் விஜய் செல்ஃபி எடுத்து வீடியோவை சமூக வலை தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
#mastermaniain2months என ஹாஷ்டேக்குகளை உருவாக்கி தளபதி ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ரசிகர்கள் தான் நடிகர்களுடன் செல்ஃபி எடுத்து கொள்வார்கள். ஆனால் தளபதி விஜய் அவர்கள் ரசிகர்களுக்காக வேன் மேல ஏறி செம மாஸாக செல்ஃபி எடுத்துளார் . இது தான் மாஸ்டர் செல்ஃபி என ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

“மாஸ்டர்” படத்தின் முதல் மூன்று லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 4 வது லுக் எப்படி இருக்கும் என நம்ம அப்டேட் ஸ்டார் ரத்ன குமார் தெரிவித்துள்ளார். தளபதி விஜய் எடுத்த செல்ஃபி போட்டோ தான் 4 வது லுக்காக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By : Saranya