Connect with us
 

News

“வலிமை” படத்தில் அஜித்துக்கு வில்லனாகும் சீறு வில்லன் !

Published

on

அஜித்துக்கு கடந்த வருடம் வெளிவந்த விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை இந்த இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நேர்கொண்ட பார்வை இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜீத் மீண்டும் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு “வலிமை ” என பெயரிடப்பட்டுள்ளது . இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

ஹீரோயினாக நயன்தாரா நடிகளாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அஜித் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தற்போது வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க போவது நவ்தீப் என்று சமூக வலைதளங்களில் தீயாய் தகவல் பரவி வருகிறது.

நவ்தீப் தமிழில் அறிந்தும் அறியாமலும் என்ற படத்தில் அறிமுகமானார். நவ்தீப் ஏற்கனவே அஜித்துடன் ஏகன் படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் ஜீவாவின் சீறு படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக நவ்தீப் நடிக்கிறார் என படக் குழு அறிவிக்கவில்லை.

வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்கு இசை அமைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. “வலிமை” படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

By : Saranya