Connect with us
 

News

பர பரப்பில் வலிமை படக்குழு காரணம் என்ன?

Published

on

தல அஜித் படப்பிப்பின் போது பல முறை காயம் பட்டுள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் கடந்த வாரம் சென்னையில் வலிமை படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது அப்போது அவருக்கு காயம் ஏற்ப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த படப்பிடிப்பில் பைக் சேஸிங் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அப்போது நிலைதடுமாறி அஜீத் கிழே விழுந்ததால் தோள்பட்டை மற்றும் காலில் காயம் ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இந்த விபத்தால் பெரிதாக ஒன்றும் பாதிப்பு இல்லை எந்த ஒரு அறுவை சிகிச்சையும் இருக்காது என படக்குழு தெரிவித்துள்ளது.

இருப்பினும் அஜீத் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி விட்டனர். இந்த நிலையில் வலிமை படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற இருப்பதாகவும், வரும் புதன்கிழமை முதல் அஜித் இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் அதற்குள் அவர் முற்றிலும் குணமாகிவிடுவார் என்றும் கூறப்படுகிறது.