Connect with us
 

News

மல்டி லுக் 7 கெட்டப்பில் விக்ரம் மிரட்டும் கோப்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் !

Published

on

டிமான்டி காலனி இமைக்காநொடிகள் போன்ற வெற்றிப் படங்களைத் தந்தஅஜய் ஞானமுத்து .தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் கோப்ரா. சீயான் விக்ரம் நடிப்பில் மூன்று மொழிகளில் உருவாகிவரும் படம் கோப்ரா .

ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளிவரவுள்ளது.தற்போது கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸாகியுள்ளது.தற்போது வெளியாகி உள்ள ஃபர்ஸ்ட் லுக்கில் சியான் விக்ரம் 7 வித்தியாசமான கெட்டப்பில் மிரட்டுகிறார்.

5 மணிக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.டிவிட்டரில் #cobrafirstlook என்ற ஹாஸ்டேக் உருவாக்கி விக்ரமின் ரசிகர்கள் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே கோப்ரா படத்தில் சியான் விக்ரம் 20 கெட்டப்புகளில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. தற்போது 7 வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்கிறார் என உறுதியாகியுள்ளது.கோப்ரா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் மற்றும் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

By : Saranya