Connect with us
 

News

புதுபேட்டை 2 படத்தின் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட செல்வராகவன் !

Published

on

இதுவரையில் தமிழ் சினிமாவில் வெளிவந்த கேங்ஸ்டர் படங்களில் என்றும் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ள படம் செல்வராகவன் இயக்கத்தில் 2006-ஆம் வெளிவந்த ‘புதுப்பேட்டை’ தனுஷ் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் மிரள வைத்த படம் அதுவும் குறிப்பாக கொக்கி குமார் கதாபாத்திரத்தில் நடித்த தனுஷின் நடிப்பு இன்று வரை பாராட்டப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் பல வருடமாக கேள்வி கேட்டு வந்தனர். இன்று வரையில் இதற்க்கான விடை சொல்லாமலே மெளனமாக இருந்து வந்தார் இயக்குநர் செல்வராகவன்.

இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் கல்லூரி விழா ஒன்றில் பங்கேற்று தனது அடுத்த படம் தனுஷுடன் இணைந்து புதுப்பேட்டை 2 இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி தனுஷ் ரசிகர்களால் தீயாய் பரவி வருகிறது.