Connect with us
 

News

அசுரன் பட நடிகைக்கு கொரோனா தொற்று !

Published

on

விஜய் நடிப்பில் வெளியான பைரவா படத்தில் அறிமுகமானவர் நடிகை அம்மு அபிராமி அதை தொடர்ந்து கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, தம்பி, சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம், விஷ்னு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன், தனுசுக்கு ஜோடியாக அசுரன் மற்றும் என் ஆளோட செருப்ப காணோம் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான துப்பாக்கி முனை படங்களில் இவர் நடித்துள்ளார்.

தற்போது கொரோனா இரண்டாம் அலை படு வேகமாக பரவி வரும் நிலையில் அம்மு அபிராமிக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளாது. இது குறித்த டுவிட்டர் பதிவில் அவர் கூறியது:-

எனக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன இதையடுத்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன் அப்போது எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனையடுத்து பருத்துவர் ஆலோசனைப்படி வீட்டில் என்னை தனிமைப்படுக்கொண்டேன் தேவையான மருந்துகளும் எடுத்து வருகிறேன். முன்மை விட வலிமையாக திரும்பி வருவேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் அதிக கவனம் எடுத்துக்கொள்ளுங்கள் என்று அதில் கூறியுள்ளார்.

Continue Reading