News

கொரோனாவை கட்டுப்படுத்த களம் இறங்கிய அஜித்தின் தக்‌ஷா குழு !

Published

on

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தனது கோரமுகத்தை காட்டி இந்தியா முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடிவருகிறது. இந்த கொடிய வைரசை தடுக்கும் பொருட்டும் தமிழக அரசு இரவு ஊரடங்கு பகுதி நேர ஊரடங்கு என எத்தனைக் கட்டுப்பாடுகளை போட்டலும் அதன் வீரியம் குறையாமல் உள்ளது.

நேற்று முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கபட்ட நிலையில் கொரோனாவின் உக்கிரம் குறையுமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் கொரோனா முதல் அலையின் போது அதன் சீரியத்தை குறைக்கும் நோக்கிலும் மேலும் பரவாமல் தடுக்கும் நோக்கிலும் நடிகர் அஜித்தின் வழிகாட்டுதலின் படி அண்ணா பல்கலைக்கழக தக்‌ஷா குழு மாணவர்களால் தயாரிக்கப்பட்ட டிரோன்களைக் கொண்டு பல இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால் தமிழக அரசின் சுகாதாரத்துறையுடன் அஜித்தின் தக்‌ஷா குழுவும் கைகோர்துள்ளது. அதன் படி டிரோன் மூலம் திருநெல்வேலி சாலையின் பல இடங்களில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Trending

Exit mobile version