Connect with us
 

News

அஜித் – பிரியதர்ஷன் சந்திப்பு பின்னணி என்ன?

Published

on

விஸ்வாசம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் போனி கபூர் தயாரிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் ஹிந்தி படமான பிங் படத்தின் ரீமேக் படத்தில் நடித்து வருகிறார் இன்னும் தமிழில் பெயர் வைக்காத இந்த படத்திற்கு தல 59 என்று பெயர் வைக்கபட்டுள்ளது.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் அஜித் இரண்டு தினங்களுக்கு முன்பாக ஐதராபாத் சென்றுள்ளார்.

அதே ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மோகன்லால் நடித்து வரும் மலையாள திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் அஜித் மற்றும் இயக்குநர் பிரியதர்ஷன் இருவரும் சந்தித்து நேற்று பேசியுள்ளனர் என்ற தகவல் வெளியானது அதை உறுதி படுத்தும் விதமாக இருவரும் பேசும் ஒரு புகைப்படம் ஒன்றும் இணையதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி தல 59 படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது முக்கியமான ஒரு விடயம் ஆகும்.